Published : 15 Sep 2024 04:32 AM
Last Updated : 15 Sep 2024 04:32 AM
புதுடெல்லி: நெடுஞ்சாலைகளில் தற்போது டோல்கேட் வரி பணமாகவும், ஃபாஸ்டேக் முறையில் டிஜிட்டல் முறையிலும் பெறப்படுகிறது. இந்நிலையில் வழிகாட்டி செயற்கைக்கோள் அடிப்படையில் டோல்கேட் வரி வசூலிக்கும் புதிய முறையை நாடு முழுவதும் மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தவுள்ளது.
இதற்காக ஜிஎன்எஸ்எஸ் - ஓபியு (குளோபல்நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் - ஆன்போர்ட் யூனிட்) என்ற சாதனம் வாகனங்களில் பொருத்தப்படும். டோல்கேட்களில் விர்சுவல் கேன்ட்ரீஸ்என்ற சிக்னல் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வழிகாட்டி செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படும்.
ஓபியு சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்கள் டோல்கேட்டில் ஆளில்லா நுழைவாயில் வழியாக நிற்காமல் கடந்து செல்லலாம். தற்போதுள்ள ஃபாஸ்ட்டேக் முறையில் கட்டணம் தானாககழிந்துவிடும். டோல்கேட்டில் வசூலிக்கப்பட்ட கட்டணம் எஸ்எம்எஸ் மூலம் பயனாளருக்கு தெரிவிக்கப்படும்.
செயற்கைக்கோள் அடிப்படையிலான இந்தடோல்கேட் வரி வசூல் முறைக்கு, தற்போதுள்ள டோல்கேட்களில் பிரத்யேக வழித்தடம்உருவாக்கப்படும். ஓபியு சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்கள் இதன் வழியாக கடந்துசெல்லலாம். இங்கு வாகனங்களை கண்காணிக்க, நவீன கண்காணிப்பு கருவிகள்பொருத்தப்பட்டிருக்கும். இந்த நுழைவாயில்வழியாக வாகனங்கள் தடையின்றி நிற்காமல்செல்ல முடியும். செயற்கைக்கோள் அடிப்படையிலான இந்த டோல்கேட் முறை நெடுஞ்சாலைமுழுவதும் அமலுக்கு வரும்போது தடையற்றபோக்குவரத்து உறுதி செய்யப்படும். இந்த முறையை முழுவதுமாக அமல்படுத்த சில ஆண்டுகள் ஆகும். செயற்கைக்கோள் முறை என்பதால், வாகனங்களின் இயக்கங்கள் கண்காணிக்கப்பட்டு, பயணம் செல்லும் தூரத்துக்குஏற்ப கட்டணம் தானியங்கி முறையில் வசூலிக்கப்படும். இந்த புதிய முறையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறையில் சாலை போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நெடுஞ்சாலைகளில் 2,000கி.மீ தூரத்துக்கு அடுத்தாண்டு ஜூன் 25-ம் தேதிக்குள் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான டோல்கேட் வரி வசூல் முறை அமல்படுத்தப்படும். அடுத்த 9 மாதங்களில் 10,000 கி.மீ தூரம் வரை இந்த முறை நீட்டிக்கப்படும். 15 மாதங்களில் 25,000 கி.மீ தூரத்துக்கும், 2 ஆண்டுகளில் 50,000 கி.மீ வரையிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...