Published : 03 Sep 2024 05:48 PM
Last Updated : 03 Sep 2024 05:48 PM

மகாராஷ்டிராவில் விஐபி வாகன எண் கட்டணம் ரூ.18 லட்சம் வரை நிர்ணயம்

மும்பை: வாகனங்களுக்கு விஐபி எண்ணை பெறுவதற்கான கட்டணத்தை மகாராஷ்டிரா அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்களுக்கு மிகவும் விரும்பி வாங்கப்படும் “0001” என்ற எண்ணுக்கான கட்டணம் தற்போது ரூ.6 லட்சமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பதிவு வரிசைக்கும் 240 விஐபி நம்பர்கள் இருப்பதைமகாராஷ்டிர அரசு கண்டறிந்துள்ளது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கான "0001” எண்ணின் விலை தற்போது ரூ.3 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும், இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான கட்டணம் தற்போதைய ரூ.50,000-லிருந்துரூ.1 லட்சமாகவும் அதிகரிக்கப்படுகிறது.

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள தனி நபர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற திரை பிரபலங்கள் தங்கள் விலையுயர்ந்த கார்களுக்கு விஐபி எண்களை வாங்கவிரும்புகிறார்கள். ஒரு சில நம்பர்களுக்கு ரூ.18 லட்சம் வரைகூட செலாவகும். இதில், ஒரு எஸ்யுவி காரையே வாங்கி விடலாம் என்ற நிலையில் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு பதிவுத் தொடரிலும், 0001, 0009, 0099, 9999 மற்றும் 0786 போன்ற குறிப்பிடத்தக்க 240 விஐபி எண்கள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x