Published : 21 Aug 2024 12:24 AM
Last Updated : 21 Aug 2024 12:24 AM
மும்பை: யுபிஐ பயனர்கள் தவறுதலாக பணம் செலுத்தினால் அதனை திரும்பப் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கியின் விரிவான வழிகாட்டுதல் குறித்து அறிவோம்.
இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
சமயங்களில் யுபிஐ பயனர்கள் தவறுதலாக பணம் செலுத்திய சூழலையும் எதிர்கொள்வார்கள். மொபைல் எண், வங்கி கணக்கு போன்றவற்றில் கவனக்குறைவாக செய்யும் தவறுகள் நிதியிழப்பு அபாயத்தை ஏற்படுத்தும். அப்படி தவறுதலாக மேற்கொண்ட பண பரிவர்த்தனை தெரிந்த நபர் என்றால் அதனை பெறுவது எளிது. அப்படி இல்லாத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
தவறான யுபிஐ அட்ரஸுக்கு பணம் அனுப்பினால் செய்ய வேண்டியது…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT