Published : 10 Aug 2024 10:57 PM
Last Updated : 10 Aug 2024 10:57 PM

2-வது முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள சிஸ்கோ நிறுவனம்

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, நடப்பு ஆண்டின் இரண்டாவது முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சுமார் 4,000 ஊழியர்கள் வரை பணி இழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சிஸ்கோ நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது பணி நீக்கம் தொடர்பான இரண்டாவது அறிவிப்பை வரும் புதன்கிழமை அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரியில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது சிஸ்கோ நிறுவன பங்குகள் சுமார் 1 சதவீதம் குறைந்து இருந்தது. தற்போது அது 9 சதவீதமாக சரிந்துள்ளது. ரவுட்டர்ஸ் மற்றும் ஸ்விட்ச்களை உற்பத்தி செய்து வரும் சிஸ்கோ, சைபர் செக்யூரிட்டி மற்றும் ஏஐ சார்ந்து அதிக கவனம் வைத்து வருகிறது. அந்த முதலீட்டை கருத்தில் கொண்டு நிறுவனத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை சிஸ்கோ கையில் எடுத்துள்ளது.

நடப்பு ஆண்டின் தொடக்கம் முதல் சுமார் 393 டெக் நிறுவனங்கள் 1.26 லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை லேஆப்ஸ்.fyi தரவுகளை உறுதி செய்துள்ளனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இன்டெல் நிறுவனம் சுமார் 15 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x