Published : 01 Aug 2024 04:52 AM
Last Updated : 01 Aug 2024 04:52 AM
புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கலுக்கான காலக்கெடு நேற்றோடுமுடிவடைய இருந்த நிலையில், மிக அதிக எண்ணிக்கையிலான வரிதாரர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்தனர். இதனால், வருமான வரி இணையதளம் முடங்கியது.
இதன் காரணமாக, பலர் ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். இது குறித்து அவர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். “ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இணையதளம் தடுமாறுகிறது. தயவு செய்து, வரும் நாட்களிலாவது தளத்தை மேம்படுத்துங்கள்” என்று பதிவிட்டனர். வருமான வரி இணைய தளத்தை இன்போசிஸ் நிறுவனம்உருவாக்கியுள்ளதால், இன்போசிஸ் நிறுவனத்தை டேக் செய்து பதிவுகள் இட்டனர். இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் வெளியிட்ட பதிவில், “இணையதளத்தில் உள்ள பிரச்சினையை தீர்க்க இன்போசிஸ், ஐபிஎம், ஹிட்டாச்சி ஆகிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். விரைவில் இணையதளம் சீராகும்” என்று பதிவிட்டார்.
காலக்கெடுவுக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால், வரிதாரர்கள் சலுகைகள் பெற முடியாது என்பதோடு தாமதமாக தாக்கல் செய்வதற்கு ரூ.5,000 வரையில் அபராதமும் செலுத்த நேரிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT