Published : 13 Jul 2024 05:37 AM
Last Updated : 13 Jul 2024 05:37 AM

தங்கம் பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,600-க்குவிற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,825-க்கும், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,600-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.58,360-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்வெள்ளி ரூ.100-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1 லட்சமாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x