Published : 12 Jul 2024 05:08 AM
Last Updated : 12 Jul 2024 05:08 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.54,280-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரானரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலைநிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, கடந்த மே 20-ம்தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.54,280 என்ற விலையில் விற்பனையானது.

கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,785ஆக இருந்தது. 24 காரட் தங்கம்பவுன் ரூ.58,040-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம் ரூ.100 ஆகவும்,பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1 லட்சமாகவும் இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x