Published : 03 Jul 2024 03:33 PM
Last Updated : 03 Jul 2024 03:33 PM

நிதி நெருக்கடி காரணமாக விடைபெறும் ‘Koo’ தளம்!

பெங்களூரு: மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடி காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதன் நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு மாற்றாக இந்த தளம் பார்க்கப்பட்டது.

நிதி நெருக்கடி, நிறுவனத்தின் சந்தை நிலவரம், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு, புதிய மூலதனத்தை திரட்டும் நோக்கில் மேற்கொண்ட பார்ட்னர்ஷிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களினால் அந்நிறுவனம் ஸ்தம்பித்து வந்தது.

இருந்தாலும் தங்களது கம்பேக் இந்த துறை சார்ந்தே இருக்கும் என அதன் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் முயற்சியில் தங்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் மற்றும் பயனர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

‘கூ’ தளம் லைம்லைட்டில் இருந்த போது சுமார் 21 லட்சம் தினசரி ஆக்டிவ் பயனர்களை கொண்டிருந்தது. மாதத்துக்கு 1 கோடி ஆக்டிவ் பயனர்களுடன் இயங்கியது. சுமார் 9,000 பிரபலங்கள் இதில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்தது. தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இந்த தளம் இயங்கியது. எக்ஸ் தளத்தில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் இதில் மேற்கொள்ள முடிந்தது. பிரேசில் நாட்டிலும் அதிகளவிலான பயனர்களை பெற்று இருந்தது. குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x