Published : 18 Aug 2014 05:28 PM
Last Updated : 18 Aug 2014 05:28 PM

5- ஆவது நாளாக சென்செக்ஸ் உயர்வு: நிஃப்டி வரலாறு காணாத உயர்வு

சென்செக்ஸ் 287 புள்ளிகள் உயர்ந்து 26,390 என்ற நிலையிலும், நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 7,874 என்ற மிக உயர்வான நிலையிலும் இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் கடந்த 5 நாட்களாக ஏற்றம் கண்டுள்ளன.

உக்ரைன் உள்நாட்டுப் பிரச்சினை போன்ற உலக அளவிலான நெருக்கடிகளைத் தாண்டி, பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள நேர்மறை முயற்சிகளால் கடந்த ஜூன் மாதம் முதல், அயல்நாட்டு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

சிப்லா, ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், பெல் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ஐடிசி, இன்போசிஸ், எச்டிஎப்சி, டிசிஎஸ், ஹீரோ மெட்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவையும் சந்தித்தன.

அதே போல, இன்றைய வர்த்தகத்தின் போது நிஃப்டி வரலாறு காணாத அளவுக்கு உயர்வு கண்டது. இன்று வர்த்தகத்தின்போது நிஃப்டி புள்ளிகள் 80 மேலாக உயர்ந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உச்சமாக கருதப்பட்ட 7,840 என்ற புள்ளிகளை கடந்து தற்போது 7,843 என்ற புதிய உச்சத்தை நிப்ஃடி தொட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் குறிப்பிடப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் முதலீட்டாலர்கள் ஈர்க்கப்பட வேண்டும் ஆகியவைகளில் ஈர்ப்பினார் சென்செக்ஸில் இந்த ஏற்றம் காணப்பட்டதாக சந்தை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x