Published : 18 May 2024 04:51 AM
Last Updated : 18 May 2024 04:51 AM
புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட மதிப்பீட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்தியாவில் பொது முதலீடு மற்றும் தனிநபர் நுகர்வு காரணமாக பொருளாதாரம் வளர்ந்து வருகிற நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 6.2 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக ஐ.நா. உயர்த்தியுள்ளது.
அதேபோல், 2025-ம் அண்டில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் நுகர்வு விலை பணவீக்கம் 2023-ல் 5.6 சதவீதமாக இருந்த நிலையில் 2024-ல் 4.5 சதவீதமாக குறையும் என்று தெரிவித்துள்ளது.
தெற்கு ஆசியாவில் 5.8%: தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டில் அதன் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் சற்று மீண்டு வருவதாக குறிப்பிட்டிருக்கும் ஐ.நா.,பணவீக்கம் காரணமாக ஆப்பிரிக்கநாடுகளில் வளர்ச்சி சுணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT