Published : 14 May 2024 05:40 AM
Last Updated : 14 May 2024 05:40 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை: சர்வதேச பொருளாதாரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது மாற்றம்ஏற்பட்டு வருகிறது. அட்சய திருதியை தினத்தை முன்னிட்டுதங்கம் விலை சில நாட்களாக உயர்ந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,725-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800க்கும் விற்பனையானது.

24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.57,560க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.90,000 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x