Published : 04 Apr 2018 11:48 AM
Last Updated : 04 Apr 2018 11:48 AM
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப் கார்ட்டின் இரண்டாம் கட்ட பங்குகளை வாங்க அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பிளிப் கார்ட்டில் முதலீடு செய்து அதனை தங்கள் பக்கம் இழுக்கும் வால்மார்ட் நிறுவனத்தின் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் 32,295 கோடி ரூபாய் வரை கடந்த ஆண்டு முதலீடு செய்துள்ளது. எலெட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவை மற்றுமின்றி பல சரக்கு உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்ய அமேசான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானுக்கு போட்டியை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் அதற்கான செயல் திட்டங்களில் இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் பிரபலமாக உள்ள முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப் கார்ட்டை வளைத்த போட நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளிப் கார்ட் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்குவதற்காக வால்மார்ட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த விவரம் வெளியானவுடன் பதிலடி நடவடிக்கையை அமேசானும் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக பிளிப் கார்ட் நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பிளிப் கார்ட் பங்குகளை வைத்துள்ள இரண்டாம் நபர்களிடம் இருந்து அதனை வாங்க தொடங்கியுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பங்குளை வாங்குவதன் மூலம் பிளிப் கார்ட் நிறுவனத்தை கட்டுப்படுத்தவும் அமேசான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் மூலம் பிளிப் கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து அதனை தங்கள் பக்கம் கொண்டு வரும் வால்மார்ட்டின் நடவடிக்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிளிப் கார்ட் மூலம் பல சரக்கு பொருட்களை விற்பனை செய்யவும் வால்மார்ட் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT