Published : 02 Apr 2018 04:41 PM
Last Updated : 02 Apr 2018 04:41 PM
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உத்தவரின் படி சீனப் பொருட்கள் மீது கூடுதல் கட்டணங்களை அமெரிக்கா விதித்ததற்குப் பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க இறக்குமதிப் பொருட்களூக்கு 3 பில்லியன் டாலர்கள் கட்டணம் விதித்து சுமையை ஏற்றியுள்ளது சீனா.
சுமார் 128 அமெரிக்கப் பொருட்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த கட்டணச் சலுகைகள், கழிவுகளை சீனா ரத்து செய்திருப்பதாக சீன நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது, இதில் அலுமினியம், பழங்கள், பன்றி இறைச்சி, உள்ளிட்ட பொருட்கள் அடங்கும் என்று ஸினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
120 அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதலாக 15% கட்டணமும் இன்னொரு 8 பொருட்கள் மீது 25% கூடுதல் கட்டணமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சீனா.
அலுமினியம் மற்றும் எஃகுப்பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா கட்டணங்களை அதிகரித்ததற்கு பதிலடியாகவே இது செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு தரப்பு அறிக்கையே தெரிவிக்கிறது.
கடந்த மார்ச் 23-ம் தேதி சீனா பொருட்கள் மீது 60 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கட்டணங்களை விதித்து அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதாவது அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அறிவார்த்த சொத்துரிமையை சீனா திருடுவதிலிருந்து அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காக ட்ரம்ப் அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது.
இத்தகைய கட்டண விதிப்புச் சுமை உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளை மீறுவதாகும், ஆனால் அமெரிக்க நலன்களை காக்க அமெரிக்காவுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அவ்வளவு உரிமை எங்களைக் காத்துக்கொள்ளும் உரிமையும் உள்ளது என்று சீனா கருதுகிறது. ஆனால் இன்னமும் கூட இருதரப்ப்பு வர்த்தக நெகிழ்வுறவுகளையே சீனா மதிப்பதாக சீனா நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT