Published : 27 Mar 2024 06:21 AM
Last Updated : 27 Mar 2024 06:21 AM

அதிக கோடீஸ்வரர் வசிக்கும் நகரம்: பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி 3-ம் இடம் பிடித்தது மும்பை

கோப்புப்படம்

புதுடெல்லி: உலகளாவிய பில்லியனர்களின் (கோடீஸ்வரர்கள்) விவரங்களை ஆய்வு நிறுவனமான ஹூருன் வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 167 பேர் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் 814 பேருடன் முதல் இடத்தில் சீனா உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் (800), 3-வது இடத்தில் இந்தியாவும் (271) உள்ளன.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் 109 பேரும், இந்தியாவில் 94 பேரும் பில்லியனர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். அதிக பில்லியனர்களைக் கொண்ட நகரங்களின் வரிசையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கை பின்னுக்குத் தள்ளி மும்பை 3-ம் இடம்பிடித்துள்ளது.

முதல் இடத்தில் நியூயார்க், 2-ம் இடத்தில் லண்டன் உள்ளன. 92 பில்லியனர்களைக் கொண்டு மும்பை 3-ம் இடத்திலும், 91 பில்லியனர்களைக் கொண்டு பெய்ஜிங் 4-ம் இடத்திலும் உள்ளன. 9-வது இடத்தில் டெல்லி உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மும்பையில் 26 பில்லியனர்கள் புதிதாக உருவாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x