Published : 15 Mar 2024 05:41 AM
Last Updated : 15 Mar 2024 05:41 AM
சென்னை: ஆவின் நெய் விலையில் ரூ.50 தள்ளுபடி வழங்கும் சலுகை, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தபால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, நீலம், ஊதாநிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இது தவிர, வெண்ணெய், நெய், தயிர் உட்பட 225 வகையான பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆவின் நெய் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அதன் விலையில் ரூ.50 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஒரு கிலோ ஆவின் நெய்ரூ.700-ல் இருந்து ரூ.650 ஆககுறைந்தது. இதேபோல், அரைகிலோ ஆவின் பனீர் விலையில் ரூ.5 தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த தள்ளுபடி அறிவிப்புக்கு கடந்த சில மாதங்களாக வரவேற்பு கூடி வந்தது.
இந்நிலையில், ஆவின் நெய் விலை தள்ளுபடி மார்ச்31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன விற்பனை பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் நெய், பனீர் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அவற்றின் விலையில்தள்ளுபடி அறிவிக்கப்பட்டி ருந்தது. மார்ச் 15-ம் தேதியுடன் ஆவின் நெய் விலை தள்ளுபடி முடிவடையும் நிலையில் இருந்தது.
தற்போது வாடிக்கையாளர் களுக்கு தேவையின் அடிப்படையில், ஆவின் நெய் விலை தள்ளுபடி மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு கிலோ ஆவின் நெய் ரூ.50 குறைந்து ரூ.650-க்குகிடைக்கும். இதுதவிர, பனீர்விலை தள்ளுபடியை தொடர்ந்து நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 200 கிராம் பனீர் ரூ.120-ல் இருந்து ரூ.110-க்கும், அரை கிலோ பனீர் ரூ.250-ல் இருந்து ரூ.225-க்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment