Published : 05 Mar 2024 07:05 AM
Last Updated : 05 Mar 2024 07:05 AM

ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசத்துக்கு 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி

கோப்புப்படம்

புதுடெல்லி: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) இதுகுறித்து வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் 64,400டன் வெங்காயத்தை ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடத்தக்க அளவுவெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்சிஇஎல் மூலம் ஐக்கிய அரபுஅமீரகத்துக்கு காலாண்டுக்கு 3,600 டன் அளவு உச்சரவரம்புடன் 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று வங்கதேசம் உள்ளிட்ட நேச நாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு வெங்காயஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.

2023 டிசம்பர் 7-ல் வெளியான அறிவிப்பின்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு இம்மாதம் 31-ம் தேதிவரை மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், உள்நாட்டுசந்தைகளில் வெங்காயத்தின் கையிருப்பு போதுமான அளவில்இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விலை சரிவை தடுக்கும் நோக்கில் நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 4 வரை இந்தியாவில் இருந்து மொத்தம் 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மதிப்பின் அடிப்படையிலான இதன் இறக்குமதியில், வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x