Published : 12 Feb 2024 05:14 AM
Last Updated : 12 Feb 2024 05:14 AM
புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வருமானம்17.4% உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.1 லட்சம் கோடியை பிஎஃப் பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது மொத்த அசல் தொகை ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. 2022-23 நிதி ஆண்டில், மொத்த அசல் தொகை ரூ.11லட்சம் கோடியாக இருந்த நிலையில் ரூ.91, 157 கோடி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிலையில், முதன்முறையாக ரூ.1 லட்சம் கோடி பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறுகையில், “வருங்கால வைப்பு நிதி நிலைமை நன்றாக உள்ளது. அதன் வருவாய்தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்றுதெரிவித்துள்ளார்.
2023-24 நிதிஆண்டுக்கான பிஎஃப்முதலீட்டுக்கான வட்டி விகித்தை 8.25 சதவீதமாக உயர்த்த நேற்றுமுன்தினம் மத்திய அறங்காவலர் வாரியம்(சிபிடி) மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. 2020-21 நிதியாண்டில்பிஎஃப் முதலீட்டுக்கான வட்டியாக 8.5% வழங்கப்பட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதால், 2021-22 நிதியாண்டிக்கான வட்டி40 ஆண்டுகளில் இல்லாத அள வாக 8.1% ஆக குறைக்கப்பட்டது. அதன் பிறகு 2022-23 நிதியாண் டுக்கான வட்டி 8.15% ஆக உயர்த்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT