Published : 02 Feb 2024 04:04 AM
Last Updated : 02 Feb 2024 04:04 AM
மதுரை: மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட் ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் தொழில், வணிகத் துறையினரிடையே ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளன.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என். ஜெகதீசன்: மக்களவைத் தேர்தல் நடைபெற விருப்பதால், தொழில் வணிகத்துறையினரும், பொதுமக்களும் 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலு கைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நேர்முக வரி மற்றும் மறைமுக வரியில் எவ்வித மாற் றமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு மறைமுக வரிகள் வாயிலாக, மாதம் ரூ.80,000 கோடி வரி திரட்டப்பட்ட நிலையில், தற்போது சரக்கு மற்றும் சேவை வரியில் மாதந்தோறும் ரூ.1,70,000 கோடி திரட்டப்பட்டு வந்தாலும், தொழில் வணிகத் துறையினரின் நியாயமான கோரிக்கைகளை ஜி.எஸ்.டி கவுன்சிலோ அல்லது நிதித் துறை நிர்வாகமோ செவிமடுத்து கேட்பது இல்லை. இது குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்க தலைவர் எஸ்.ரத்தினவேல்: ஜிஎஸ்டி வரியில் இரண்டாவது சீர்திருத்தம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. மீன் வளர்ச்சித் துறையில் கடல் உணவு, எண்ணெய் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தி, 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருப்பது வர வேற்கத்தக்கது.
மடீட்சியா தலைவர் லெட்சுமி நாராயணன்: இடைக்கால பட்ஜெட்டில் சிறு குறு, நடுத்தர தொழில்களுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக் கப்படவில்லை. ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படவில்லை. கரோனா காலகட்டத்துக்குப் பின்பு நலிவடைந்த சிறு, குறு தொழில்களை மீட்பதற்கு எந்த விதமான சலுகைகளும் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வங்கி வட்டி விகிதங்கள் எதுவும் குறைக்கப் படவில்லை.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன்: பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேலை வாய்ப்பு, காஸ் சிலிண்டர் மானி யம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஓய்வூதியர்கள், மகளிர், அரசு ஊழியர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளர் கே.பத்ம நாதன்: சரக்கு ரயில் போக்குவரத் துக்காக பிரத்யேக வழித்தடம் அமைத்தல், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை, 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும் ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகை பற்றிய அறிவிப்பு இடம் பெறாதது வருத்தமளிக்கிறது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளியல் துறை தலைவர் சி.முத்து ராஜா: மத்திய அரசின் இடைக்கால வரவு, செலவு திட்ட பலன் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும். வறுமை ஒழிப்பு, ஏழை மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், இளைஞர் மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த வீட்டு வளர்ச்சித் திட்டங்கள் பாராட்டத்தக்கவை.
நேரடி மற்றும் மறைமுக வரிமுறையில் சிறிய மாற்றம், குறைப்பு எதிர்பார்க்கப்பட்டது. அது இடம் பெறவில்லை. வரி நிர்வாகம் சார்ந்த முடிவுகள், எளிமைப் படுத்தப்படும் என்ற முயற்சி பலன் தரும். உண்மையான வரிச் சுமையை தாங்கி வாழும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் பற்றி முக்கியத்துவம் தரப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT