Last Updated : 26 Feb, 2018 04:40 PM

 

Published : 26 Feb 2018 04:40 PM
Last Updated : 26 Feb 2018 04:40 PM

சாம்சங் கேலக்ஸி எஸ்9, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி 9, கேலக்ஸி 9 பிளஸ் மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

உலக அளவில் மொபைல் போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸூக்கு போட்டியாக கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் போன்களை தயாரித்துள்ளது. 2018ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் தனித்துவம் மிக்க தயாரிப்பாக இந்த போன்கள் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே இந்த புதிய போன்கள், மொபைல்போன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போன்களில் உயர் ரக கேமரா சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் குறைந்த ஒளியிலும் கூட மிக நேர்த்தியாக புகைப்படம் எடுக்க முடியம். மேலும் புள்ளிகள் இல்லாமல் மிக துல்லியமாக படம் எடுக்க முடியும்.

‘ஸ்லோ மோஷன்’ வீடியோ மற்றும் இரட்டை ஸ்பீக்கர் வசதியும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.

 

அதுமட்டுமின்றி, ஆக்யுமென்ட்டெட் ரியாலிட்டி தொழில் நுட்பம் மூலம் புகைப்படங்களை எமோஜிகளாக மாற்றும் நவீன தொழில்நுட்பமும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.

கேலக்ஸி எஸ்9 மொபைல் போன், 5.8 இஞ்ச் எச்டி டிஸ்பிளேயுடனும், 64, 128, 256 ஜிபி மெமரி மற்றும் 4ஜி ரேம், 3000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்9 பிளஸ் 6.2- இஞ்ச் டிஸ்பிளே, 64, 128, 256 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 3500 எம்ஏஎச் பேட்டரி வசதியும் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய மொபைல் போன்கள் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்து வரும் மொபைல் காங்கிரஸில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் இந்த போன்கள் மார்ச் 16ம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த போன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x