Published : 20 Jan 2024 11:33 AM
Last Updated : 20 Jan 2024 11:33 AM

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்வு

மும்பை: காலை 10:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 115.63 புள்ளிகள் உயர்வடைந்து 71,798.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66.25 புள்ளிகள் உயர்ந்து 21,688.65 ஆக இருந்தது. பங்குச்சந்தைகள் இன்றைய (சனிக்கிழமை) சிறப்பு வர்த்தக அமர்வை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 71,983 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 21,714 ஆக இருந்தது.

வழக்கமாக சனிக்கிழமைகளில் பங்கச் சந்தைகள் இயங்காது. ஆனால், மகாராஷ்டிராவில் வரும் திங்கள் கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கத்துக்கு மாறாக இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் நடைபெற்று வருகின்றன. பங்குச்சந்தைகள் இன்று தொடக்க அமர்வை லாபத்துடன் தொடங்கின. தொடர்ந்து சற்றே தடுமாறி ஏற்ற இறக்கமின்றி பயணித்து மீண்டும் சற்றே மீண்டது. காலை 10:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 115.63 புள்ளிகள் உயர்வடைந்து 71,798.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66.25 புள்ளிகள் உயர்ந்து 21,688.65 ஆக இருந்தது.

அமெரிக்க பங்குச்சந்தைகளின் ஏற்றம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. நிதிப்பங்குகளின் ஆதாயம் காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின. பின்னர் சற்றே தடுமாறி லாபத்தில் தொடர்ந்தது. என்றாலும் 3-வது காலாண்டு அறிக்கை காரணமாக ஹெச்யூஎல், ரிலையன்ஸ் பங்குகள் அழுத்தத்தில் இருந்தன. கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏறுமுகமாக இருந்து வந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் - நிப்டி ஆகியவை புதிய உச்சங்களை எட்டின. இந்நிலையில் 16ம் தேதி பங்குச்சந்தையில் லேசான சரிவு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 17ம் தேதியும் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது. கடந்த 16 மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் சென்செக்ஸ் 2.23%, நிப்டி 2.09% சரிந்தது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ் போன்ற பங்குகள் உயர்வில் இருந்தன. டாடா ஸ்டீல், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஜேஎஸ்டபில்யூ ஸ்டீல், டிசிஎஸ், எம்அண்ட்எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ போன்ற பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x