Published : 18 Jan 2024 07:38 AM
Last Updated : 18 Jan 2024 07:38 AM

தெலங்கானா மாநிலத்தில் ரூ.12,400 கோடி முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு

பெங்களூரு: தெலங்கானாவில் டேட்டா சென்டர் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ரூ.12,400 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடியை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலத்தில் ரூ.12,400 கோடி முதலீட்டில் புதிய திட்டங்களை குழுமம் தொடங்க உள்ளது. இதில், ரூ.5,000 கோடியில் 100 மெகாவாட் திறனிலான டேட்டா சென்டர் அமைக்கும் திட்டமும் அடங்கும்.

தவிர, அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ், அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களும் தெலங்கானா மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துள்ளன. இவ்வாறு அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அதானி குழுமம் தற்போது விடுபட்டு பங்குகளின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அதானி குழுமம் மீண்டும் முதலீட்டு நட வடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஐந்து ஆண்டுகளில் 24 பில்லியன் டாலரை முதலீடு செய்வதாக கவுதம் அதானி உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x