Published : 17 Jan 2024 06:20 AM
Last Updated : 17 Jan 2024 06:20 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.160குறைந்து ரூ.46,800-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத்தங்கத்தின் விலை பவுன் ரூ.50,560-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.78,000 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x