Published : 16 Jan 2024 01:08 AM
Last Updated : 16 Jan 2024 01:08 AM
சென்னை: ராயல் என்பீல்ட் நிறுவனம் ஷாட்கன் 650 எனும் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் பிரிட்டன், ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இதில் அடங்கும். இதற்கான முன்பதிவு திங்கட்கிழமை இந்தியாவில் தொடங்கியது.
வரும் மார்ச் மாதம் முதல் ‘ஷாட்கன் 650’ டெலிவரி இந்தியாவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,59,430. SG650 கான்செப்ட் மீதான ஈர்ப்பு காரணமாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
648 சிசி, 4-ஸ்ட்ரோக் EFI இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், லிட்டருக்கு 22 கி.மீ மைலேஜ், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், டிஸ்க் பிரேக், ட்யூப்லெஸ் டயர் கொண்டுள்ளது. நான்கு வண்ணங்களில் இந்த வாகனம் கிடைக்கும். சிங்கிள் ஃப்ளோட்டிங் சீட் தனித்துவ கவனத்தை ஈர்க்கிறது. ராயல் என்பீல்ட் விங்மேன் எனும் புதிய மொபைல் செயலி மூலம் ஷாட்கன் வாகனத்தின் லைவ் லொகேஷன், எரிபொருள், ஆயில் லெவல், சர்வீஸ் ரிமைண்டர் போன்ற விவரங்களை பயனர்கள் அறிந்து கொள்ளலாம். கஸ்டம் ஷெட், கஸ்டம் புரோ மற்றும் கஸ்டம் ஸ்பெஷல் என மூன்று வேரியண்ட்களில் இந்த வாகனம் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT