Published : 02 Jan 2024 06:46 AM
Last Updated : 02 Jan 2024 06:46 AM

உற்பத்தித் துறையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவெடுக்கும்: ஆனந்த் மஹிந்திரா தகவல்

புதுடெல்லி: மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியப் பொருளாதாரம் பல தசாப்தங்களாக எதிர்பார்த்த எழுச்சியை அடைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தற்போது தென்படத் தொடங்கியுள்ளன.

எனவே, சீனாவின் விநியோகச் சங்கிலி மேலாதிக்கத்துக்கு நம்பகமான சவாலை இந்தியா ஏற்படுத்த வேண்டும். அதுதான் தற்போதைய உலகத்தின் தேவையாக உள்ளது. அதற்கான சிறந்த வாய்ப்பை 2024-ம் ஆண்டு வழங்கும். மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகளும் நம்மை வந்தடையும்.

உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரித்து பொருளாதாரம் மற்றொரு பாய்ச்சலை அடைவதற்கான வாய்ப்பு நம்பிடியில் உள்ளது. அதனை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல புதிய ஸ்டார்ப் அப் நிறுவனங்களில் அந்த ஆசை வெளிப்படுகிறது. இதன்மூலம் உற்பத்தித் துறையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவெடுக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகள் கொந்தளிப்பை எதிர்கொண்டாலும், மூலதனம், உள்கட்டமைப்பு முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார இன்ஜினின் வேகம் குறையாமல் இந்தியா பார்த்துக் கொண்டது. 2024-ல் நுகர்வு வேகமெடுக்கும் என்பது நல்ல செய்தி. இதையடுத்து, நிறுவனங்கள் நுகர்வோர் விரும்பும் தயாரிப்புகளை உற்பத்தி செய்து தேவையை ஈடு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தும். குறிப்பாக, விலை மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்ப்பில் அவை மகிழ்ச்சியான போட்டியை எதிர்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x