Published : 21 Dec 2023 08:40 PM
Last Updated : 21 Dec 2023 08:40 PM

போலி ஆவணங்களுடன் சிம் கார்டு வாங்கினால் இனி 3 ஆண்டுகள் சிறை!

தொலைத் தொடர்பு மசோதா 2023 வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளர்ச்சி, தொலைத்தொடர்பு சேவை, தொலைத்தொடர்பு வலைப்பின்னல் (நெட்ஒர்க்ஸ்), அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டுவரப்பட்ட மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் இதனை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று (புதன்கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

  • இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
  • போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
  • தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
  • சிம் பாக்ஸ் போன்றவற்றின் மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
  • வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • மாநில அரசு தலைமையிலான சர்ச்சைத் தீர்வுக் கட்டமைப்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி உரிமைப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பார்கள்.
  • தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு, பொதுச் சொத்தாக இருந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்.
  • தனியார் சொத்தாக இருந்தால், உரிமையாளருக்கும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x