Published : 18 Jan 2018 10:35 AM
Last Updated : 18 Jan 2018 10:35 AM

விசாகப்பட்டினத்தில் சர்வதேச பெண் தொழிலதிபர்கள் கருத்தரங்கு: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பெண் தொழிலதிபர்களின் கருத்தரங்கை நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இதில் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் பெண் தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.

3 நாட்கள் நடைபெற உள்ள கருத்தரங்கு நேற்று நோவோ டெல் நட்சத்திர ஹோட்டலில் தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து சந்திரபாபு நாயுடு பேசியதாவது: பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

தொழில் தொடங்கும் பெண்களை எங்களது அரசு வெகுவாக ஆதரித்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் பெண்களுக்கான தொழில் தொடங்க தனி இடம் ஒதுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ஜவுளி, மற்றும் இதர தொழிற்சாலைகள் அமைப்பதில் ஆந்திரா முன்னிலை வகிக்கிறது. விசாகப்பட்டினத்தில் ஏற்கனவே 2 முறை தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்களுடன் கருத்தரங்கு நடந்துள்ளது. இதில் ஆந்திர அரசு பல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அடுத்த மாதம் 24,25,26 ஆகிய 3 நாட்கள் மீண்டும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் ஒப்பந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது என சந்திரபாபு நாயுடு பேசினார்.

சர்வதேச பிரதிநிதிகள்

இந்த கருத்தரங்கில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட சார்க் நாடுகளான வங்கதேசம், நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்து 40-க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் தொழில் துறையில் பெண்கள் சாதிக்க 12 அம்சங்கள் குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த 54 பேர் விவாதிக்கின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் எப்படி தொழில் தொடங்குவது ? ஆந்திராவில் தொழில் தொடங்க உள்ள சாதக, பாதக நிலைகள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் சாதிப்பது எப்படி ? போன்ற பல அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x