Published : 22 Nov 2023 05:40 PM
Last Updated : 22 Nov 2023 05:40 PM
புதுடெல்லி: பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விதிமுறைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் கடைபிடிக்க தவறிய காரணத்துக்காக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
டெல்லி, கொச்சி மற்றும் பெங்களூருவில் இது தொடர்பாக டிஜிசிஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏர் இந்தியா விதிமுறை மீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கடந்த 3-ம் தேதி விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதற்கு ஏர் இந்தியா தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிஏஆர் விதிகளை மீறிய காரணத்துக்காக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தாமதமான விமான சேவையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிடம் வழங்காதது, விமான நிலைய பணியாளர்கள் சிலருக்கு பயிற்சி அளிக்காதது மற்றும் பயன்படுத்த முடியாத நிலையிலான இருக்கைகளில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்காதது போன்றவை இதற்கு காரணங்களாக பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்தியாவில் இயங்கும் வரும் முன்னணி விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT