Published : 04 Nov 2023 11:30 AM
Last Updated : 04 Nov 2023 11:30 AM

விலையில் சதம் அடிக்க காத்திருக்கும் சின்ன வெங்காயம் - பின்தொடரும் பெரிய வெங்காயம் விலை

திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தைத் தரம் பிரிக்கும் தொழிலாளி. படம்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: தேவை அதிகரித்து வரத்துக் குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.85-க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.75-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையால் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-ஐ எட்ட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வெங் காயம் மொத்த விற்பனைக்கென தனியாக மார்க்கெட் செயல் படுகிறது. திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் செயல்படும் வெங்காய மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற் பனைக்கு வருகிறது.

பெரிய வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் வெங் காய மார்க்கெட்டில் இருந்து திண்டுக்கல், மதுரை, தேனி உள் ளிட்ட பல மாவட்டங்களுக்கு சில் லறை விற்பனை செய்யும் வியா பாரிகள் வாங்கிச் செல்கின்றனர். சின்ன வெங்காயம் விளைச்சல் முடிவுற்ற நிலையில், விவசாயிகள் தற்போது புதிதாக வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.

இதனால் வெங்காயம் வரத்துக் குறைந்துவிட்டது. விலை ஏறும்போது விற்றுக் கொள்ளலாம் என பட்டி களில் இருப்பு வைத்துள்ள விவசாயிகள், வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பதால் மார்க் கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தேவை அதிகரித்தபோதும் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்துப் போதுமானதாக இல்லை. இதனால் வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனையாகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் ரூ.90 வரை விற் பனை செய்கின்றனர்.

இதேபோல் வடமாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப் படும் பெரிய வெங்காயம் வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் பெரிய வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.75 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து வெங்காயம் ஏற்றுமதியாளர்கள் சங்க முன் னாள் தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது: வெங்காய விளைச்சல் முடிந்து, விவசாயிகள் அடுத்து நடவு செய்துள்ளனர். இது அறுவடைக்கு வரத் தாமதமாகும். இதனால் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

இது தேவைக்குப் போதுமானதாக இல்லை. இதனால், விலை உயர்ந்துள்ளது. ஒரு வாரத்தில் தீபாவளி வருவதால் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-ஐ எட்ட வாய்ப்புள்ளது.

சின்ன வெங்காயப் பற்றாக் குறையால் பெரிய வெங்காயத்தின் தேவை அதிகரித்து அதன் விலை யும் உயர்ந்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த 40 சதவீத வரி தொடர்வதால், ஏற்றுமதி குறைந்தபோதிலும் உள்ளூர் மார்க்கெட்டுகளில் விலை குறையாத நிலை தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x