Published : 02 Nov 2023 04:49 AM
Last Updated : 02 Nov 2023 04:49 AM

சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு: நவ.10 முதல் அமல்

சென்னை: சென்னையில் 1,000 சதுர அடிக்குமேல் வீடு கட்ட அனுமதி கட்டணம்100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக சென்னையில் கட்டிட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், 1,000 சதுர அடிக்கு மேல் வீடுகளுக்கான கட்டிடங்கள் கட்டினால் அனுமதி கட்டணம் 100% வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தளப்பரப்பு குறியீட்டின் (FSI) அடிப்படையில், 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டினால் ஏற்கெனவே, முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90 கட்டணமும், 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தகட்டணமானது ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி உயர்த் தப்படவில்லை.

அதேநேரம், வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம், தொழிற்சாலைகளின் தளப்பரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1,076 அடி) மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், குடியிருப்பு மற்றும்கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை முதல் 40 சதுரமீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90, 41-முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 1050 என இருந்தது. இந்த தொகையானது, தற்போது ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், வணிகம் மற்றும்தொழிற்சாலை கட்டிடங்களுக் கும், அதே குறிப்பிட்ட சதுர மீட்டர்அளவில், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப் பட்டு ரூ.210, ரூ.370, ரூ.920 மற்றும் ரூ.2,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட் டுள்ளது. இதேபோல் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப் பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின்படி, இந்த புதிய கட்டண உயர்வு வரும் 10-ம் தேதி முதல் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x