Published : 12 Oct 2023 08:50 AM
Last Updated : 12 Oct 2023 08:50 AM
புதுடெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் (சிபிடிடி) நிதின் குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது.
சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் குறித்த ஐந்தாம் கட்ட தகவல் பெறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளுடன் இதுபோன்ற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.
அந்த வகையில், தற்போது 104 நாடுகளுடன் சுமார் 36 லட்சம் நிதிக் கணக்கு குறித்த விவரங்களை சுவிஸ் வங்கிகள் பகிர்ந்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. வருமான வரி துறைக்கு தெரியாமல், வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி வரி ஏய்ப்பு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அத்தகைய நபர்கள் மீது கருப்பு பணச் சட்டத்தின்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நிதின் குப்தா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT