Published : 01 Oct 2023 06:14 AM
Last Updated : 01 Oct 2023 06:14 AM
சென்னை: இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பண்டிகை நிகழ்வான ‘அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ வரும் அக்.8 முதல் தொடங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணிநேரம் முன்னதாகவே தொடங்குகிறது.
சாம்சங், ஒன்பிளஸ், ஐக்யூ, சோனி போன்ற பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட்போன்கள், ஃபேஷன் மற்றும் அழகு சாதனங்கள், டிவிக்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மளிகை பொருட்கள் என பல பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்காக 5,000-க்கும் மேற்பட்டவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் போட், இன்டெல், பாஸ்ட்ராக், டாமி ஹில்பிகர், விப்ரோ, ஏசியன் பெய்ன்ட்ஸ், ஹக்கிஸ் மற்றும் பலவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி, கட்டணமில்லா இஎம்ஐ வசதி, பிற முன்னணி வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் அமேசான் பே லேட்டர் மூலம் ஷாப்பிங் செய்து அடுத்த மாதம் பணம் செலுத்தும் வகையில் ரூ.1 லட்சம் வரை உடனடி கிரெடிட் வசதி வழங்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் இலவச அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் 5% வரம்பற்ற கேஷ்பேக் சலுகையை பெறலாம். பரிவர்த்தனைகள் மற்றும் கட்டணமில்லா இஎம்ஐ மூலம் இந்த பண்டிகைக் கால ஷாப்பிங்கை வாடிக்கையாளர்கள் அமேசான் பே கிஃப்ட் கார்டுகளை வாங்கினால் 10% வரை பணம் திரும்பப் பெறலாம். மேலும் சுற்றுலா செல்லும்போது ஹோட்டல்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கான விமானங்கள், ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பலவற்றில் 40% வரை கட்டண சலுகையை பெறலாம்.
இதுகுறித்து அமேசானின் இந்திய நுகர்வோர் வணிகத்தின் துணைத் தலைவரும், மேலாளருமான மணீஷ் திவாரி, கூறும்போது, "எங்கிருந்தும், எந்த நேரத்திலும் ஷாப்பிங் செய்ய, பலவிதமான கட்டண தேர்வுகள் மற்றும் அவர்கள் விரும்பும் மொழியில் வழங்குகிறோம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் இந்த ஆண்டு எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஒரு சிறந்ததாக அமையும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT