Published : 27 Sep 2023 08:01 AM
Last Updated : 27 Sep 2023 08:01 AM
புதுடெல்லி: வரும் பண்டிகைக் காலத்தில் 81 சதவீத வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இவ்வாண்டு பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிக்கும் என்று அமேசான் நிறுவனம் சார்பாக ஆய்வு மேற்கொண்ட நீல்சன் மீடியா தெரிவித்துள்ளது. அடுத்தஇரு மாதங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளன. பண்டிகை நாட்களையொட்டி மக்கள் ஆடைகள், மொபைல் போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது வழக்கமாக மாறியுள்ளது. அதுவும் ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்குவது மக்களிடையே பரவலாகியுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகளை அறிவிக் கின்றன. இந்நிலையில், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பண்டிகை நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்கால ஷாப்பிங் தொடர்பாக பெருநகரங்கள் மற்றும்சிறுநகரங்களில் வசிக்கும் மக்களிடையே கருத்து கேட்கப்பட்டது.
இதில் 81 சதவீதம் பேர், வரும்பண்டிகைக்காலத்தில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 68 சதவீதம் பேர் அமேசான் தளம் மூலம் வாங்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
76 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் வாங்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். நான்கில் ஒருவர் ஏசி,பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பெரிய அளவிலான வீட்டுஉபயோகப்பொருட்களை வாங்கதிட்ட மிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். பணம் செலுத்துதலைப்பொருத்த வரையில் 42% பேர் யுபிஐ செயலியை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT