Published : 20 Sep 2023 07:25 AM
Last Updated : 20 Sep 2023 07:25 AM
சென்னை: வாடிக்கையாளர்கள் பொருட் களை ஆன்லைனில் வாங்க வசதியாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் சார்பில் ‘சூப்பர் எஸ்.எஸ்.மார்ட்’ என்ற புதிய இணையதள நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் 50 ஆண்டுகளைத் தாண்டி பொன்விழா கண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம், தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், மதுரை மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் 5 மெகா சூப்பர் ஸ்டோர்களை நிறுவியுள்ளது. தற்போது சூப்பர் எஸ்.எஸ்.மார்ட் என்ற புதிய இணையதள நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
இணையவழி ஷாப்பிங்கில் ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகம், சமையலறை, அழகுசாதனப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்டவைவிற்பனைக்காகப் பட்டியலிடப் பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி (செப்.18)முதல் பரீட்சார்த்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் முழுவீச்சில் ஆன்லைன் ஷாப்பிங் செயல்படத் தொடங்கும் என்று சூப்பர் எஸ்.எஸ்.மார்ட் (ஆன்லைன் ஷாப்பிங்) நிர்வாக இயக்குநர் இரா.சபாபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment