Published : 15 Sep 2023 02:50 PM
Last Updated : 15 Sep 2023 02:50 PM
சென்னை: அண்மையில் சர்வதேச சந்தையில் ஐபோன் 15 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என நான்கு போன்களை அறிமுகம் செய்தது. இந்த போன்களின் விலை இந்தியாவில் அதிகம். அதுவே சில நாடுகளில் குறைவாக உள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் விற்பனையாகும் ஐபோன் புரோ மாடல் போன்களுடன் ஒப்பிடும்போது அமீரகத்தில் இந்த மாடலின் விலை 20 சதவீதம் குறைவு. ஐபோன் 15 போன் அமீரகத்தில் ரூ.76,817. அதுவே இந்தியாவில் ரூ.79,990. ஐபோன் 15 புரோ போன் இந்தியாவில் ரூ.1,34,900. அமீரகத்தில் இதே மாடலின் விலை ரூ.97,157. அதேபோல ஐபோன் 15 புரோ மேக்ஸ் போனின் விலை ரூ.1,59,900. அமீரகத்தில் இதன் விலை 1,15,237. இந்த விலை வித்தியாசம் இந்தியாவில் உள்ள ஐபோன் பிரியர்களுக்கு கசப்பான செய்தியாக அமைந்துள்ளது.
காரணம் என்ன? - அமீரகத்தில் அதிகளவில் ஐபோன்கள் விற்பனையாகும். அதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் நடைபெறும் ஐபோன் வர்த்தகத்தின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், இந்தியாவில் புது மாடல்களை காட்டிலும் பழைய மாடல் (ஜெனரேஷன்) போன்கள் விற்பனை அதிகம் நடைபெறுவதாகவும் ஆப்பிள் விநியோகஸ்தகர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வரிகளும் இதற்கு காரணம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் சிறப்பு அம்சங்கள்
ஐபோன் 15 புரோ, ஐபோன் 5 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT