Published : 10 Aug 2023 01:39 PM
Last Updated : 10 Aug 2023 01:39 PM
மும்பை: இந்தியாவில் இணைய இணைப்பு மற்றும் டெலிகாம் நெட்வொர்க் உதவியின்றி ஆஃப்லைனில் யுபிஐ பேமென்ட் மேற்கொள்ளும் வசதியை இந்திய ரிசர்வ் அறிமுகம் செய்யவுள்ளது.
நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (என்எப்சி) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆஃப்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கொள்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ-லைட் மூலம் இது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஃப்லைனில் சிக்கலின்றி யுபிஐ வழியே பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் யுபிஐ-லைட் அறிமுகமானது.
யுபிஐ-லைட்: குறைந்த தொகையை எளிதில் அனுப்ப உதவுகிறது யுபிஐ-லைட். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சமாக ரூ.200 வரை பயனர்கள் பணம் அனுப்ப முடியும். ஒட்டுமொத்தமாக இதன் டெய்லி லிமிட் ரூ.2,000. போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் இந்த வசதியை வழங்குகின்றன. இதற்கு பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து யுபிஐ-லைட்டில் பணம் அனுப்பலாம். அதன் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
தற்போது யுபிஐ-லைட் பயன்பாடு மாதத்துக்கு ஒரு கோடி பரிவர்த்தனை என உள்ளது. இதை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி இதை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT