Published : 04 Aug 2023 10:07 AM
Last Updated : 04 Aug 2023 10:07 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்வடைந்து 65,497 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 81 புள்ளிகள் சரிந்து 19,462 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக நேரத்தின் போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 09:38 மணி நிலவரப்படி, சென்செக் 195.62 புள்ளிகள் உயர்வடைந்து 65,436.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.20 புள்ளிகள் உயர்ந்து 19,480.85 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் குழப்பமான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. பெரும்பாலான பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் பேங்க், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, என்டிபிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x