Published : 25 Jul 2023 07:38 AM
Last Updated : 25 Jul 2023 07:38 AM
புதுடெல்லி: ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎப்ஓ 6 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இபிஎப்ஓ கடந்த மார்ச் 28-ம் தேதி, 2022-23 ஆம் ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது.
இந்நிலையில் இந்த வட்டி விகித உயர்வுக்கு , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் 60(1) பாராவின் கீழ் மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக இபிஎப்ஓ நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இபிஎப்ஓ அதன் அலுவலகங்களுக்கு நேற்று வெளியிட்ட உத்தரவில், உறுப்பினர்களின் 2022-23-ம் ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட்களுக்கு அவர்களின் கணக்குகளில் 8.15% வட்டியை வரவு வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இபிஎப் டெபாசிட்களுக்கு 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2021-22 ஆம் நிதியாண்டுக்கு 8% ஆக கடந்த 2022 மார்ச்சில்
இபிஎப்ஓ குறைத்தது. அதாவது 1977-78-ம் ஆண்டுக்குப் பிறகு இது மிகக்குறைந்த அளவாகும். இந்நிலையில் மறு ஆண்டே இது மீண்டும் 8.15 சதவீதத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதார்கள் பலன் அடைவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT