Published : 21 Jul 2023 07:29 PM
Last Updated : 21 Jul 2023 07:29 PM

சென்செக்ஸ் 887 புள்ளிகள் வீழ்ச்சி 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 887 புள்ளிகள் (1.31 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,684 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 234 புள்ளிகள் (1.17 சதவீதம்) வீழ்ந்து 19,745 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 574 புள்ளிகள் சரிவடைந்து 66,997.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 135.45 புள்ளிகள் சரிந்து 19,843.70 ஆக இருந்தது.

இன்போசிஸின் பலவீனமான முதல் காலாண்டு அறிக்கை ஐடி பங்குகளுக்கான முன்னறிவிப்பாக அமைந்து அத்துறை பங்குகளிடையே ஒரு தோல்வியைத் தூண்டியது. இதனால் ஐடி பங்குகளின் அதிமான விற்பனையால் இந்திய பங்குச் சந்தைகள் தங்களது 6 நாட்கள் லாப போக்கிற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்தன. இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் இறுதி நாளை கடும் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. இன்ட்ரா வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 1,038 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 887.64 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,684.26 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 234.20 புள்ளிகள் வீழ்ந்து 19,745ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், டாடா மோட்டர்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

இன்போசிஸ், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டிசிஎஸ்,ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x