Published : 30 Jun 2023 11:24 AM
Last Updated : 30 Jun 2023 11:24 AM
மும்பை: பங்குச்சந்தை காலை 10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 432.181 புள்ளிகள் உயர்வடைந்து 64,347.60 ஆக இருந்தது.
இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை புதிய உச்சத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 357.70 புள்ளிகள் உயர்வடைந்து 64,273.12 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.50 புள்ளிகள் உயர்ந்து 19,071.60 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை புதிய உச்சம் தொட்டு தொடங்கியது. காலை 10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 432.181 புள்ளிகள் உயர்வடைந்து 64,347.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 106.00 புள்ளிகள் உயர்ந்து 19,078.10 ஆக இருந்தது.
இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் பங்குளின் ஏற்றம் மற்றும் வலுவான அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகள், வெளிநாட்டு நிதி வரவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை புதிய ஏற்றத்துடன் தொடங்கின. முன்னதாக வியாழக்கிழமை விடுமுறைக்கு முன் புதன்கிழமை சென்செக்ஸ் 64,000 புள்ளிகளையும், நிஃப்டி முதன் முறையாக 19,000 புள்ளிகளையும் தொட்டு புதிய சாதனை படைத்திருந்தது. பெரும்பான்மையான பங்குகள் உயர்வில் இருந்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர்கிரிடு கார்ப்பரேஷன், இன்போசிஸ், எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் உயர்வில் இருந்தன.
டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT