Published : 14 Jun 2023 09:10 PM
Last Updated : 14 Jun 2023 09:10 PM

Netflix Bites | நெட்ஃப்ளிக்ஸின் சமையல் சீரிஸ்களில் பார்வையாளர்களை ஈர்த்த உணவை ருசிக்க வாய்ப்பு

கோப்புப்படம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் சமையல் ஷோக்களில் பங்கேற்கும் தங்களது ஃபேவரைட் சமையல் கலைஞர்கள் சமைக்கும் உணவை பார்வையாளர்கள் நேரடியாக ருசிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இப்போதைக்கு இந்த அனுபவத்தை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டுமே பெற முடியும். வரும் 30-ம் தேதி முதல் அந்த நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நெட்ஃப்ளிக்ஸ் தள பார்வையாளர்கள் உங்கள் ஃபேவரைட் செஃப் கைவண்ணத்தில் தயார் செய்து கொடுக்கும் உணவை ருசிக்கலாம்.

இதற்கெனவே ‘Netflix Bites’ எனும் முயற்சியை நெட்ஃப்ளிக்ஸ் தளம் முன்னெடுத்துள்ளது. இதில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பான பிரபல சமையல் தொடர்களில் பங்கேற்ற சமையல் கலைஞர்கள், பார்வையாளர்களுக்கு உணவை தயாரித்து வழங்க உள்ளனர். இதன் மூலம் இதுவரையில் திரைவழியே அந்த உணவை பார்த்து வந்தவர்களுக்கு ருசிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அச்சு, ஒலி, காட்சி, டிஜிட்டல் என அனைத்து வகையான ஊடகங்களிலும் சமையல் நிகழ்ச்சிக்கு என பிரத்யேக ரசிகர்கள் வட்டாரம் இருப்பது உண்டு. அதற்கு உதாரணமாக பல நிகழ்ச்சிகளை சொல்லலாம். அதே வரவேற்பு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் சமையல் சீரிஸ்களுக்கும் உண்டு.

நிச்சயம் இது பயனர்களுக்கு திரையில் இருந்து நேரடி ருசி அனுபவத்திற்கு அழைத்துச் செல்லும் உன்னத முயற்சி. அதை நெட்ஃப்ளிக்ஸ் முன்னெடுத்துள்ளது. பார்வையாளர்களுக்கு சில நிகழ்வுகளின் நேரடி அனுபவத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாது காக்டெயில் பானங்களையும் இதில் ருசிக்கலாம் என தெரிகிறது. இது பாப்-அப் (தற்காலிக) உணவகமாக இயங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. கடந்த 2007 முதல் ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x