Published : 08 Jun 2023 10:50 AM
Last Updated : 08 Jun 2023 10:50 AM

ஜூன் 8, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 8) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் கடந்த மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,565-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,240-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 0.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,100 ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x