Published : 08 Jun 2023 06:52 AM
Last Updated : 08 Jun 2023 06:52 AM

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் மோட்டார் சைக்கிள் இன்ஜின் ஆயில் அறிமுகம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் மோட்டார் சைக்கிள்களுக்கான `செர்வோ ஹைப்பர்ஸ் போர்ட் எஃப் 5' என்ற சிந்தெட்டிக் 4டி இன்ஜின் ஆயிலை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் மோட்டார் சைக்கிள்களுக்கான `செர்வோ ஹைப்பர்ஸ் போர்ட் எஃப் 5' என்ற சிந்தெட்டிக் 4டி இன்ஜின் ஆயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. செர்வோ பிராண்டு தூதரும், நடிகருமான ஜான் ஆபிரகாம் இந்த ஆயிலை அறிமுகப்படுத்தினார். மேலும், புதிய `செர்வோ கிரீஸ் மிரகிள்' எனும் பிரீமியம் கிரீஸையும் அறிமுகப்படுத்தினார்.

விழாவில் பேசிய ஜான் ஆபிரகாம், ``பைக் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம் உள்ள எனக்கு இந்த செர்வோ ஹைப்பர் ஸ்போர்ட் எஃப் 5 மோட்டார் சைக்கிள் இன்ஜின் ஆயிலின் அறிமுக விழாவில் பங்கேற்பது மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது'' என்றார்.

நம்பிக்கையின் சின்னம்: நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் தலைவர் எஸ்.எம்.வைத்யா, ``இந்திய லூப்ரிகன்ட் சூப்பர் பிராண்டான செர்வோ, நம்பிக்கை, நம்பகம், புத்தாக்கம் ஆகியவற்றின் சின்னமாக திகழ்கிறது'' என்றார். இந்த இன்ஜின் ஆயில் முற்றிலும் சிந்தெட்டிக் பேஸ் ஆயிலைக் கொண்டு உரு வாக்கப்பட்டு, அதற்கு ஏற்றவகையிலான சேர்க்கைப் பொருட்களையும் சேர்த்து சர்வதேச தரத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய மாடல்கள்: இந்த இன்ஜின் ஆயிலை ‘B5 VI-28’ விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் லேட்டஸ்ட் மாடல்கள் உட்பட எல்லா வகையான மோட்டார் சைக்கிள்களிலும் பயன்படுத்தலாம். அதேபோல், நடுத்தர, உயர்தர பைக்குகளில் இந்த ஆயிலை பயன்படுத்தலாம். மேலும், மிகக் குளிரான, வெப்பமான வானிலை நிலவும் பகுதிகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் இந்த ஆயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

செர்வோ கிரீஸ் மிரகிள்: இதேபோல், செர்வோ கிரீஸ் மிரகிள் லித்தியம் அடிப்படையிலான கிரீஸுக்கு மாற்றாக உயரிய செயல் திறன்கொண்ட வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளசெய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x