Published : 17 Jan 2022 03:49 PM
Last Updated : 17 Jan 2022 03:49 PM
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதைப் போட்டியாகக் கருதாமல், விளையாட்டாகவே கருத வேண்டும் என விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விலங்குகள் நல வாரியத்தின் பார்வையாளராக வாரிய உறுப்பினர் மிட்டல் பங்கேற்றார். ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மிட்டல் கூறியதாவது:
''பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரிய விழா. இவ்விழாவில் ஜல்லிக்கட்டு நடத்துவது அவர்களுடைய பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இதைப் போட்டியாக நினைக்கக் கூடாது. பாரம்பரிய விளையாட்டாகக் கருத வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 5 ஆண்டுகளாகப் பார்வையாளராகப் பங்கேற்று வருகிறேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி
தமிழக அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதை நான் வரவேற்கிறேன்.
போட்டியில் 1,500 காளைகளை அவிழ்க்க முடிவு செய்துள்ளனர். ஒரு நிமிடத்துக்கு ஒரு காளை வீதம் 500 காளைகளை அவிழ்க்கலாம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை தெரிவித்துள்ளேன்".
இவ்வாறூ மிட்டல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT