Published : 01 Jan 2022 03:37 PM
Last Updated : 01 Jan 2022 03:37 PM

கல்லூரி மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வலியுறுத்தி யுஜிசி சுற்றறிக்கை: கி.வீரமணி கண்டனம்

கோப்புப் படம்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு மாணவர்களை சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்லி சுற்றறிக்கை அனுப்பியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "யுஜிசி என்னும் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை ஒன்றினை இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்திய சுதந்திர விழாவின் 75-ம் ஆண்டையொட்டி ஜனவரி ஒன்று முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டுமாம்.

இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! ஒரு கல்வித்துறை உயரதிகார அமைப்பு அறிவியலுக்கு விரோதமாக, புராண மூடத்தனத்தைச் சுமந்து, அதனை மாணவர்கள் தலையில் கட்டுவது அடிமுட்டாள்தனமும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதும் ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு - விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்த அறிவிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடந்துகொண்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x