Published : 30 Dec 2021 03:50 PM
Last Updated : 30 Dec 2021 03:50 PM

ஆரணியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த பாஸ்கர், கார்த்தி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை - ஜலகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (21). ஓரகடத்தில் உள்ள தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து ஓரகடத்தில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு வந்துள்ளார். இதேபோல் வெல்லூர் கிராமம் குன்று மேடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நண்பர் சங்கரை( 38) பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஆரணி சாலையில் உள்ள நடுகுப்பம் நோக்கி வந்துள்ளார்.

ஆரணி - சந்தவாசல் சாலையில் உள்ள பார்வதி அகரம் என்ற இடத்தில் எதிர்பாராமல் இருவரது வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் படுகாயமடைந்த மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது, வாகனங்களை இயக்கிய கார்த்தி மற்றும் பாஸ்கர் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கரின் நண்பர் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இந்த விபத்து குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x