Published : 05 Sep 2021 06:40 PM
Last Updated : 05 Sep 2021 06:40 PM
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிகளில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் மாயன் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர்.
வெள்ளக்கரடு என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் (35) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் ரூ.500, ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஆனைமலையன்பட்டி வெள்ளக்கரடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (45) என்பவர் இந்த நோட்டுகளை மாற்றச் சொன்னதாகக் கூறியுள்ளார்.
இதன்பேரில் போலீஸார் அலெக்ஸாண்டர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 900 ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இவற்றைக் கைப்பற்றி இருவரையும் ராயப்பன்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
இதுவரை எவ்வளவு பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர், இதில் மற்றவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT