Published : 01 Sep 2021 04:12 PM
Last Updated : 01 Sep 2021 04:12 PM

அன்புமணி மகள் திருமணம்: ராமதாஸ் நடத்தி வைத்தார்

அன்புமணி மகள் திருமணம்.

சென்னை

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் - சௌமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சங்கமித்ரா சௌமியா அன்புமணி - சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை ராமதாஸ் சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மணமகள் - மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் இத்திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x