Published : 14 Aug 2021 02:29 PM
Last Updated : 14 Aug 2021 02:29 PM
கிருஷ்ணகிரியில் தோட்டக் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) கலைவாணர் அரங்கில் நடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார்.
இதில் புதிய தோட்டக் கல்லூரி துவக்கம் உட்பட பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதில் உள்ள சிறப்பம்சங்கள்:
* கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதியதாக துவங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
*தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்
*வேளாண்மையில், தொழில் முனைவோர்களை ஈர்க்க, வேளாண் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre) வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre) அமைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT