Published : 29 Jul 2021 07:07 PM
Last Updated : 29 Jul 2021 07:07 PM
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பப் பகுதியில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவானது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “அலாஸ்காவின் தென்கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரைப் பகுதிகளிலிருந்து வெளியேறினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்படும்போது கடுமையான அதிர்வுகளை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அலாஸ்காவில் 2018 நவம்பர் மாதம் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT