Published : 09 Jul 2021 02:52 PM
Last Updated : 09 Jul 2021 02:52 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் தேவைக்கு விண்ணப்பிக்கலாம் என்று வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கே.சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக தனியார் நிலங்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், தங்களது பெயர், முகவரி, ஆதார் எண், நில அளவை எண், தேவையான மரக்கன்றுகள் போன்ற விவரங்களுடன் அருகில் உள்ள வனச்சரக அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம்.
அதன்படி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, இலுப்பூர் வட்டங்களைச் சேர்ந்தோர் புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சி.சங்கரையும் (9443626482), திருமயம், அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் வட்டங்களைச் சேர்ந்தோர் அறந்தாங்கி வனச்சரக அலுவலர் எம்.சதாசிவத்திடமும் (8610166358) தெரிவிக்கலாம்.
அதேபோல, குளத்தூர் மற்றும் விராலிமலை வட்டங்களைச் சேர்ந்தோர் கீரனூர் வனச்சரக அலுவலர் கே.வெங்கடேசனிடமும் (9786131171), பொன்னமராவதி மற்றும் ஆலங்குடி வட்டங்களைச் சேர்ந்தோர் பொன்னமராவதி வனச்சரக அலுவலர் டி.மேரிலென்சியிடமும் (8098385967) தெரிவிக்கலாம்'' என மாவட்ட வன அலுவலர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT